தாயாரின் உடலுக்கு முதலமைச்சர் கண்ணீர் மல்க அஞ்சலி….

Author: Aarthi
13 October 2020, 9:12 am
cm cry - updatenews360
Quick Share

எடப்பாடி: முதலமைச்சர் பழனிசாமி அவரது தாயார் தவசாயி அம்மாள் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள்(வயது 93), கடந்த வெள்ளிக்கிழமையன்று முதுகு தண்டுவடம் பாதிப்பு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

edapadi 2 cry -updatenews360

இந்நிலையில் இன்று அதிகாலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

தாயாரின் மறைவு செய்தியறிந்து முதலமைச்சர் பழனிசாமி சிலுவம்பாளையம் கிராமத்திற்கு வந்தார். பின்னர் தனது தாயாரின் உடலுக்கு அவர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

இதனை தொடர்ந்து முதலமைச்சர் தாயாரின் இறுதிச் சடங்குகள் இன்று காலை 9.30 மணியளவில் சிலுவம்பாளையத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 46

0

0