தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை: இன்று மசோதா தாக்கல் செய்கிறார் முதலமைச்சர்..!!

By: Aarthi
4 February 2021, 8:58 am
assembly - updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தாக்கல் செய்கிறார்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு நவம்பர் 21ம் தேதி தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்ய உள்ளார்.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான மசோதாவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று தாக்கல் செய்கிறார். தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை ஜூன் வரை நீட்டிக்க மசோதாவை தாக்கல் செய்கிறார்.

இதன் மூலம் தேர்தல் நடக்காத மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளில் தனி அலுவலர் பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்படும்.

Views: - 45

0

0