அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் 4ம் தேதி ஆலோசனை

2 September 2020, 10:11 pm
Quick Share

சென்னை: வரும் 4-ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தலைமைச் செயலாளர் சண்முகம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுப்போக்குவரத்து முடக்கப்பட்டு இருந்ததால் கடந்த 5 மாதங்களாக பேருந்துகள் ஓடவில்லை. நேற்று முதல் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. இதையடுத்து மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து சேவையும் வரும் 7-ந்தேதி முதல் தொடங்கும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் காணொலி காட்சி மூலம் 4ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.

மேலும் தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து சேவை தொடக்கம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. கொரோனா தடுப்புப் பணி, தளர்வுகளுக்கு பிறகு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை பற்றி ஆலோசனை செய்யவுள்ளார். மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு குறித்தும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 0

0

0