கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை…!!

18 July 2021, 9:02 am
Quick Share

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு பணிகள் பற்றி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் பரவலாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும் கோவை, சேலம், தஞ்சை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்று பரவல் சற்று அதிகரித்து வருகிறது. மேலும் 3வது கொரோனா தொற்று அலை பரவல் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு பற்றியும் அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் மாவட்ட அளவில் கொரோனா தொற்று பரவலின் நிலை மற்றும் சில அரசு திட்ட செயல்பாடுகள் பற்றி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா தொற்று தடுப்பில் மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், தொற்று பரவல் அதிகரிக்கும் இடங்களில் மாவட்ட நிர்வாகம் செய்துள்ள சிறப்பு ஏற்பாடுகள் பற்றி இந்த கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் பாதுகாப்பாக வைக்கப்படுவது பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இன்று காலை 10.30 மணியளவில் தலைமைச்செயலகத்தில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

தலைமைச்செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் தலைமைச்செயலாளர் இறையன்பு ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 134

0

0