அமெரிக்க அதிபர் தேர்தலில் பின்னடைவு : ‘Chill Donald, Chill!’… ஓராண்டு கழித்து டிரம்பிற்கு பதிலடி கொடுத்த சிறுமி கிரேட்டா..!!!

6 November 2020, 5:13 pm
trump - greta - updatenews360
Quick Share

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், ஓராண்டுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவத்திற்கு, சூழலியல் செயல்பாட்டாளரான கிரேட்டா தன்பெர்க் பதிலடி கொடுத்துள்ளார்.

ஸ்வீடனை சேர்ந்த கிரேட்டா தன்பெர்க் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக 16 வயதில் இருந்தே தனி ஒரு ஆளாக போராடி வருகிறார். அந்நாட்டு நாடாளுமன்றத்தின் முன்பு நடத்திய போராட்டத்தினால், உலகம் முழுவதும் கவரப்பட்டார். கடந்த ஆண்டு ஐநாவில் நடந்த பருவநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொண்டு, பருவநிலை மாற்றத்திற்கு எதிராக ஆவேசமாக குரல் கொடுத்தார். இதன் காரணமாக 2019ம் ஆண்டின் சிறந்த ஆளுமை என டைம் இதழ் அறிவித்தது.

இதனால், அதிருப்தியடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி விடுத்த டுவிட்டர் பதிவில், “இது எவ்வளவு அபத்தமானது, கிரேட்டா சினத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். நல்ல நண்பருடன் பழைய படத்திற்கு செல்லுங்கள், ஜில் கிரேட்டா ஜில்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ள டிரம்ப், “வாக்கு எண்ணிக்கை நிறுத்துங்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், டிரம்பின் தற்போதைய சூழலை கிண்டல் செய்யும் விதமாக, அவரது பழைய டுவிட்டை சுட்டிக்காட்டிய சூழலியல் செயல்பாட்டாளரான கிரேட்டா, “இது எவ்வளவு அபத்தமானது, டொனால்டு சினத்தைக் கட்டுப்படுத்த வேண்டும், நல்ல நண்பருடன் பழைய படத்திற்கு செல்லுங்கள், ஜில் டொனால்டு ஜில்,”எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 19

0

0