சீனா ஏவிய ராக்கெட் எந்தநேரமும் பூமியில் விழும் அபாயம்.. உலக நாடுகளுக்கு அடுத்தடுத்து இம்சை!!

6 May 2021, 8:47 pm
march 5b - updatenews360
Quick Share

கடந்த வாரம் சீனா ஏவிய ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்துள்ளதால், அடுத்த வாரம் பூமியில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

சீனா சார்பில் விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் டியன்ஹி விண்வெளி நிலைய கட்டுமான கலத்தை, மார்ச்5பி ராக்கெட் மூலம் கடந்த மாதம் 29ம் தேதி விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ராக்கெட் அனுப்பப்பட்டதையும், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பவர்களை எரிக்கும் நிகழ்வை ஒப்பிட்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நேரடிய தொடர்பில் இருக்கும் இணையதள செய்தி நிறுவனம் புகைப்படம் ஒன்றை வெளியிட்டது. அதில், சீனா விளக்கு ஏற்றுகிறது, இந்தியா விளக்கு ஏற்றுகிறது’ என எழுதப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், சீனாவிற்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்ததால், அந்த பதிவு நீக்கப்பட்டது.

இதனிடையே, சீன விண்வெளி நிலைய கட்டுமான கலத்தை நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிலைநிறுத்திவிட்டு, மீண்டும் பூமிக்கு திரும்புவதற்கான வேலைகளில் மார்ச்5பி ராக்கெட் ஈடுபட்டது. அப்போது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டை அந்த ராக்கெட் இழந்தது. இந்த சூழலில், எந்த நேரமும் அந்த ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து பூமியில் விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், முழு தகவல் கிடைக்காததால், பூமியின் எந்தப் பகுதியில் அந்த ராக்கெட் விழும் என்பதை கணிக்க முடியாமல் விஞ்ஞானிகள் தவித்து வருகின்றனர்.

Views: - 183

0

0