கிறிஸ்துவர்களின் ஜெபத்தினால்தான் திமுக ஆட்சிக்கு வந்தது : அமைச்சர் நாசர் பேச்சு… அப்போ சர்ச்சை பாதிரியார் சொன்னது..?

Author: Babu
2 August 2021, 4:16 pm
minister nasar - updatenews360
Quick Share

கிறிஸ்துவர்களின் ஜெபத்தினால்தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக ஆட்சிக்கு வந்ததாக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் பகுதியில் உள்ள அற்புத ஜெபகோபுரம் ஏஜி தேவாலயத்தின் 40ம் ஆண்டின் ஆரம்ப விழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, நடைபெற்ற நிகழ்ச்சியில் முக்கிய அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் கலந்து கொண்டார். மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக ஆவடி சிறுபான்மை மற்றும் அரசியல் குழு தலைவர் பிஷப் டாக்டர் K.மேஷாக் ராஜா, சுவிசேஷகர் ஸ்டீபன் போதகர் ஐசக் லிவிங்ஸ்டன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நாசர், கிறிஸ்துவர்களின் ஜெபத்தினால்தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக ஆட்சிக்கு வந்ததாக கூறினார்.

அவர் பேசியதாவது :- மத்திய, மாநில அரசுகள் இதுவரையில் சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தது. சிறுபான்மையின மக்களை பாதிக்காதவாறே ஆட்சி நடத்தி வந்தனர். ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக சிறுபான்மையினர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர். அதன் விளைவு மத்தியில் விரைவில் ஆட்சி முடிவுக்கு வரும். இந்து ஜெப கூட்டத்தில் இந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவர்கள் என மூன்று மதத்தினரும் உள்ளனர். இதுதான் மத நல்லிணக்கம் மத ஒற்றுமை.

இந்தியா பல்வேறு மொழிகள் மதங்களை சார்ந்து இருந்தாலும் அவர்களுக்குள் வேற்றுமை இல்லாமல் பழகி வரும் இந்தியாவை யாராலும் பிளவுபடுத்த முடியாது. கிறிஸ்துவர்களின் ஜெபத்தினால்தான் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது, எனக் கூறினார்.

அமைச்சரின் இந்தப் பேச்சை தொடர்ந்து, திமுக ஆட்சிக்கு வந்தது கிறிஸ்துவர்கள் போட்ட பிச்சை எனக் கூறிய சர்ச்சை பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் கூற்று உண்மையா..? என நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Views: - 340

0

0