மத்திய அரசுக்கு திடீர் கோரிக்கை விடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…! என்ன தெரியுமா..?

18 August 2020, 3:04 pm
Edappady 06 updatenews360
Quick Share

சென்னை: நமாமி கங்கை திட்டம் போல, காவிரிக்கும் சிறப்பு திட்டம் வகுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது காவிரி, கோதாவரி நதிகள் இணைப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் தர வேண்டும் என்று மத்திய ஜல்சக்தி அமைச்சருடனான ஆலோசனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.

பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்டவும் அனுமதி அளிக்க கூடாது. அணைகளை இயக்குவதில் மாநில அரசுக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும். அணைகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் அமைச்சர் கஜேந்திர சிங் உடனான ஆலோசனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தவிர, தமிழகத்தின் விவசாயம், குடிநீர் ஆதாரமாக காவிரி ஆறு விளங்குகிறது, நமாமி கங்கை திட்டம் போன்று காவிரிக்கும் சிறப்பு திட்டம் வகுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.