முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி : தொண்டர்கள் அதிர்ச்சி

19 April 2021, 10:53 am
cm wish - updatenews360
Quick Share

சென்னை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓய்வில்லாமல், சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, தேர்தல் முடிந்த பிறகு, வீட்டில் இருந்தவாறு கட்சிப் பணிகளையும், தேர்தல் தொடர்பான விவகாரங்கள் பற்றியும் தொலைபேசியின் மூலமே கவனித்து வந்தார்.

அண்மையில், ஒன்றரை மாதங்களுக்கு பிறகு, சட்டப்பேரவைக்கு சென்ற அவர், கொரோனா தடுப்பு பணிகள் பற்றி உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், குடலிறக்கம் காரணமாக அறுவை சிகிச்சைக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் பழனிசாமி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 89

1

0