நான் என்ன பாம்பா..? பல்லியா..? : ஸ்டாலினின் தொடர் விமர்சனத்திற்கு ‘செக்’ வைத்த எடப்பாடியார்..!!!

Author: Babu Lakshmanan
19 March 2021, 2:01 pm
Quick Share

கடலூர் : முதலமைச்சர் பதவியை தொடர்ந்து விமர்சித்து வந்த திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டம் புவனகிரியில் அதிமுக வேட்பாளர் அருண்மொழித்தேவனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- திமுக ஆட்சியில் இழந்த காவிரி உரிமையை மீட்டுக் கொடுத்த அரசு அதிமுக என்று அறிவோம். நான் விவசாயி என்று கூறினால் ஸ்டாலினுக்கு என்ன? அவருக்கு ஏன்? கோபம் வருகிறது. எடப்பாடி விவசாயி, விவசாயி என குதிக்கிறார் என ஸ்டாலின் சொல்லுகிறார். நான் குதித்தால் உனக்கு என்ன? நான் எப்போதும் விவசாயி தான். இப்போதும் விவசாயம் செய்து வருகிறேன்.

விவசாயிகள் கஷ்டத்தை நான் உணர்ந்தவன். வெயில், மழை, இரவு, பகல் என எதையும் பார்க்காமல் ரத்தம் வியர்வை சிந்தி உழைக்கும் ஒரே தொழில் விவசாயம். இதைப் பற்றி ஸ்டாலினுக்கு சிந்திக்க தெரியாது. சிந்தித்தாலும் பேசத் தெரியாது. என் தாத்தா காலத்தில் இருந்து விவசாயம் தான் செய்து கொண்டிருக்கிறோம், என்று முதலமைச்சர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்தார்.

Views: - 83

0

0