‘ஸ்டாலினுக்கு என்ன தெரியும்’ : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காட்டம்..!!!

11 November 2020, 1:47 pm
Quick Share

தூத்துக்குடி : நான் விவசாயம் என்கிற தொழிலை செய்து வருவதாகவும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு என்ன தொழில் தெரியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக தெரிவித்தார்.

தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, திமுக தலைவர் முக ஸ்டாலின், போலி விவசாயி என்று விமர்சித்தது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :- எனக்கு விவசாயம் தெரியும், ஸ்டாலினுக்கு என்ன தெரியும். நான் விவசாயி என்னும் சான்றிதழை அவர் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. முதலமைச்சராக இருக்கும் போதும் கூட, நான் விவசாயத்தை செய்து வருகிறேன். என்னுடைய சிறு வயது முதலே எவ்வளவு கடின உழைப்பாளி என்பது பற்றி ஊர் மக்களிடம் கேட்டால் தெரிய வரும், எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, அவர் பேசுகையில், ” தூத்துக்குடியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரையில் இங்கு 2.24 லட்சம் பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பில் முடிவு எடுக்கப்படும்,” என்றார்.

Views: - 13

0

0