பிப்.,யும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பா..? ஆட்சியர்கள், மருத்துவ குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை…!!!

29 January 2021, 2:40 pm
EPS discuss - updatenews360
Quick Share

சென்னை : கொரோனா ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

கொரோனா தொற்று தமிழகத்திலும் பரவத் தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22ம் தேதி முதல் 12 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நீட்டிக்கப்பட்டது. இடையிடையே பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. 12வது கட்டமாக கடந்த 1ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.

ஒவ்வொரு முறையும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவது வழக்கம். அந்த வகையில், தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக்காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு எந்த அளவு குறைந்துள்ளது என்பதை விரிவாக கேட்டு அறிந்தார்.

இதைத் தொடர்ந்து, மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஏற்கனவே, மத்திய அரசு பிப்ரவரி 28ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி உள்பட பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. எனவே, தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது பற்றியும், தளர்வுகளை அறிவிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்துள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. பேருந்து, ரயில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. சினிமா தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்களும் திறக்கப்பட்டுவிட்டன. கல்லூரிகளை பொறுத்தமட்டில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மட்டும் திறக்கப்பட்டு நடந்து வருகின்றன.

பள்ளிகளை பொறுத்தமட்டில் எஸ்.எஸ்.எல்.சி., +2 ஆகிய வகுப்புகள் திறக்கப்பட்டுள்ளன. எனவே, கல்லூரிகளில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் படித்து வரும் மாணவர்களுக்கான வகுப்புகளை படிப்படியாக திறப்பது குறித்தும், பள்ளிகளில் பிற வகுப்புகளை படிப்படியாக திறப்பது குறித்து அறிவிப்பி விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Views: - 35

0

0