வரும் 29ம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!!

24 September 2020, 5:00 pm
Quick Share

சென்னை : 8வது கட்ட ஊரடங்கு 30ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 8வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்புகளை பொறுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 8வது கட்ட ஊரடங்கு வரும் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29ம் தேதி ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையின் போது, ஊரடங்கை தளர்த்துவதா..? அல்லது நீட்டிப்பதா..? என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

பிற மாநிலங்களை விட தற்போது நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அதிகம் பாதிப்பு உள்ள மாவட்டங்களில் தொற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.

Views: - 10

0

0