கண் தானம் செய்தார் முதலமைச்சர் பழனிசாமி : கண் தானத்தை ஊக்குவிக்கும் செயலுக்கு குவியும் பாராட்டு..!
7 September 2020, 11:37 amசென்னை : தேசிய கண் தானத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண் தானம் செய்துள்ளார்.
நாடு முழுவதும் தேசிய கண் தானம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அரசு மற்றும் தனியார் சார்பில் கண் தானம் செய்வதன் அவசியத்தை உணர்த்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கண் தானத்தை ஊக்குவிக்கும் விதமாக, தேசிய கண்தான தினத்தையொட்டி, தனது கண்களை தானம் செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கண் தானம் செய்வதற்கான ஒப்புதல் படிவத்தில் அவர் கையெழுத்திட்டார்.
கண்தானம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாகவும், அரசியல் தலைவர்களுக்கு எல்லாம் முன்மாதிரியான செயலை செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
0
0