நாட்டிலேயே முதன்முறையாக ‘கோவிட் வீட்டு பராமரிப்பு திட்டம்’ தமிழகத்தில் தொடக்கம்…!

14 August 2020, 12:59 pm
Edappadi palanisamy - updatenews360
Quick Share

சென்னை : கொரோனா அறிகுறியுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்காக அம்மா கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த மாதத்தை காட்டிலும் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. நோய் தொற்றிற்கு எதிராக அரசு எடுத்து தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக, முன்பை விட தற்போது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இது தமிழக மக்களிடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நாட்டிலேயே முதல்முறையாக, கொரோனா அறிகுறியுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களுக்காக, ஒரு புதிய திட்டத்தையும் அவர் காணொளி காட்சியின் மூலம் அறிமுகப்படுத்தி வைத்தார்.

‘அம்மா கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு திட்டம்’ என்னும் இந்தத் திட்டம், கொரோனா அறிகுறிகளுடன் வீட்டுத் தனிமையில் உள்ளவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ரூ.2,500 மதிப்பிலான பரிசோதனை கருவிகள், மருந்துகள், மாத்திரைகள் அடங்கிய பெட்டகம் வழங்கப்படுகிறது. இதய துடிப்பையும், ஆக்ஸிஜன் அளவை கண்டறியும் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மற்றும் டிஜிட்டல் தெர்தல் மீட்டர் போன்ற உபகரணங்களும் அடங்கும்.

மேலும், 14 நாட்களுக்கு தேவையான விட்டமின் சி மற்றும் டி மாத்திரைகள், கபசுகுடிநீர் தூள், 14 முகக்கவசங்கள், சோப்பை ஆகியவையும் வழங்கப்படுகிறது.

Views: - 7

0

0