‘தமிழக பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதியுங்கள்’ : ஒடிசா, ராஜஸ்தான் அரசுகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்..!!

5 November 2020, 4:09 pm
Cm - crackers - updatenews360
Quick Share

சென்னை : தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கான தடையை விலக்கிக் கொள்ள வலியுறுத்தி ராஜஸ்தான் மற்றும் ஒடிசா மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

காற்று மாசுபட்டு, கொரோனா பரவல் அதிகரிக்கும் எனக் கருதி ராஜஸ்தான் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பட்டாசுகளை வெடிக்க அம்மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இதனால், அம்மாநிலத்திற்கு தமிழகத்தில் இருந்து பட்டாசு விற்பனை செய்வது தடைபட்டுள்ளது. இதன் காரணமாக, விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பட்டாசு தயாரிப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கான தடையை விலக்கிக் கொள்ள வலியுறுத்தி ராஜஸ்தான் மற்றும் ஒடிசா மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், தமிழகத்தில் பட்டாசு உற்பத்தி செய்யும் தொழில் நேரடியாக 4 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 4 லட்சம் பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, பட்டாசு வெடிப்பதற்காக விதிக்கப்பட்ட தடையினால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே 90 சதவீதம் பட்டாசு பயன்பாடு தமிழகத்தில்தான் உள்ளது.

காற்று, ஒலி மாசுபாடு விதிகளின்படி, பசுமை பட்டாசுகளே அதிகம் உற்பத்தி செய்யடுகின்றன. எனவே, பட்டாசு வெடிப்பதற்கான தடையை விலக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 25

0

0