மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் : நலம் விசாரித்தார் முதலமைச்சர் பழனிசாமி..!

23 October 2020, 1:16 pm
edappadi palanisamy - updatenews360
Quick Share

சென்னை : சென்னையில் தனியார் மருத்துவமனையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை நேரில் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் தங்கியிருந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு கடந்த 14ம் தேதி இரவு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உதவியாளர்களின் மூலம் ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துமவனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்தார். அப்போது, உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். சிறிது நேரம் அவரிடம் பேசிவிட்டு, பிறகு அங்கிருந்து மீண்டும் புறப்பட்டுச் சென்றார்.

Views: - 20

0

0