சென்னையில் ஆளுநர் பன்வாரிலாலுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..!

Author: Babu
5 October 2020, 5:44 pm
cm meet governor - updatenerws360
Quick Share

சென்னை : சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலாலை நேரில் சந்தித்து பேசினார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதேபோல, அரசியல் நிலவரமும் உச்சகட்டத்தை தொட்டியுள்ளது. அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு, 7ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களின் ஆதரவாளர்களுக்கு மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

பரபரப்பான இந்த அரசியல் சூழலில் சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் விளக்கிக் கூறியதாகத் தெரிகிறது. அதோடு, அண்ணா பல்கலையை இரண்டாக பிரிப்பது மற்றும் பெயர் மாற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 38

0

0