22ம் தேதி அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு : ஜெ., நினைவிடம் திறப்பு குறித்து ஆலோசனை
19 January 2021, 2:10 pmவரும் 22ம் தேதி தமிழக அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறார்.
டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். தமிழகத்தில் முடிவடைந்துள்ள திட்டங்களை தொடங்கி வைக்க தமிழகம் வர பிரதமருக்கு அழைப்பு விடுத்ததாகவும், அதனை அவர் ஏற்றுக் கொண்டதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, தமிழக தேர்தல் அரசியல் குறித்தும், வரக்கூடிய சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், வரும் 22ம் தேதி தலைமை செயலகத்தில் அனைத்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். இந்த ஆலோசனையின் போது, ஜெயலலிதா நினைவிடம் திறப்பு, தேர்தல் குறித்தும் மேலும், சட்டப்பேரவை கூட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
0
0