கிராமங்களில் தேர்தல் அறுவடையாகும் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு.. ஜெ., பாணியில் எடப்பாடியாரின் அதிரடி.. கலங்கும் ஸ்டாலின்!!

5 February 2021, 1:57 pm
FARmers loan - updatenews360
Quick Share

சென்னை : திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்வதாகப் பிரச்சாரம் செயதுவரும் நிலையில், சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ. 12,110 கடன் தள்ளுபடி செய்வதாக அதிரடியாக அறிவித்தது திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த அறிவிப்பு வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைக்க வழிசெய்யும் என்று கருதப்படுவதால், அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மிக எளிமையாக மக்களுடன் பழகுவதுடன், தனது விவசாயப் பின்னணியை எடுத்து சொல்வதால், அவரை தங்களில் ஒருவராக கிராமப்புற மக்கள் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. இதனை எதிர்பாராத ஸ்டாலின், முதல்வர் விவசாயிகளுக்கு எதிரானவர் என்று பிரச்சாரம் செய்து வருகிறார். மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை வட இந்தியாவில் சில மாநில விவசாயிகள் எதிர்ப்பதை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக அவர் கூறி வருகிறார்.

EPS - stalin - updatenews360

மேலும், 2006-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரூ. 7 ஆயிரம் கோடி பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்று இப்போது ஊர் ஊராக சொல்லி வருகிறார். அதை நினைவுபடுத்தி, மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடியாக தேர்தல் வாக்குறுதி அளித்தும் வருகிறார். கடந்த 2006-ஆம் ஆண்டு கருணாநிதிக்கு மக்கள் வாக்களித்தது போல, இந்த முறையும் தனது கடன் தள்ளுபடி வாக்குறுதியை நம்பி மக்கள் வாக்களிப்பார்கள் என்று ஸ்டாலின் கருதுகிறார். திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இந்த வாக்குறுதி இடம்பெறும் என்று கருதப்பட்டது.

தொடர்ந்து இரண்டு முறை தோல்வி அடைந்த திமுகவை இந்த முறை விவசாயக் கடன் தள்ளுபடி வாக்குறுதி கரை சேர்க்கும் என்று ஸ்டாலின் மனக்கோட்டை காட்டிவரும் சூழலில், அந்தக் கோட்டையைத் தகர்ப்பது போல எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு விளங்குகிறது.

Farmers CM - Updatenews360

கடந்த 2006-ஆம் ஆண்டு திமுக ரூ. 7 ஆயிரம் கோடி பயிர்க்கடனை தள்ளுபடி செய்தபோது, மத்திய அரசு அவருக்கு ஆதரவாக இருந்தது. ஆனால் இன்றைய சூழலில் மத்திய பாஜக அரசை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. அதனால் திமுகவின் பயிர்க்கடன் வாக்குறுதி நடைமுறை சாத்தியம் இல்லாததாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இதை வைத்து ஓட்டுக்களை பெறும் வழியையும் எடப்பாடி பழனிசாமி அடைந்துவிட்டார். மேலும், யாரும் எதிர்பாராத வகையில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பாணியில் அவர் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பு, தமிழக அரசியலைக் கலக்கிவிட்டதுடன் எதிர்க்கட்சிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டது.

CM Farmer- Updatenews360

கருணாநிதி ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்டது ரூ. 7 ஆயிரம் கோடிதான். ஆனால், அதிமுக அரசு ரூ. 12,110 கோடியை தள்ளுபடி செயது பெரும் சாதனை செய்துள்ளது. இதனால் 16.43 லட்சம் விவசாயக் குடும்பங்கள் பயன்பெறும் என்பதால், கிட்டத்தட்ட ஒரு கோடி கிராமப்புற மக்களுக்கு இது பயன் தரும். இதனால், கிராமப் புறங்களில் இரட்டை இலைக்கு ஏற்கனவே இருக்கும் ஆதரவு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வரும் தேர்தலில் பெரும் தாக்கத்தை உருவாக்கும் என்பதால் ஸ்டாலின் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்.

இப்போது தனது பிரச்சாரத்தால்தான் இந்தத் தள்ளுபடி நடைபெற்றது என்று கூறிக்கொள்வதைத் தவிர ஸ்டாலினுக்கு வேறு வழியில்லை. மேலும் அனைத்து வங்கிகளில் இருக்கும் பயிர் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்பதைத் தவிர, வேறு என்ன செய்யலாம் என்கிற திகைகப்பில் திமுக தலைவர்கள் இருக்கிறார்கள். முதல்வரின் இந்த பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பால் கிராமப்புற வாக்காளர்கள் திமுகவை ஒதுக்கி தள்ளுபடி செய்வார்கள் என்ற சூழலை எப்படி எதிர்கொள்வது என்று திமுகவினர் தீவிரமாக சிந்தித்து வருகிறார்கள்.

Views: - 1

0

0