என்னை பற்றி நினைக்கவிட்டால் ஸ்டாலினுக்கு தூக்கம் வராது : முதலமைச்சர் பழனிசாமி கிண்டல்…!!

19 November 2020, 1:45 pm
Quick Share

சேலம் : தன்னைப் பற்றி நினைக்காவிட்டால் அன்றைய தினம் முக ஸ்டாலினுக்கு தூக்கம் வராது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிண்டலாக தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் வனவாசி அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று லம் வழங்கும் திட்டத்தில் பயன்பெறும் ஏரிகளை புனரமைத்து மேம்படுத்தும் பணிகள் மற்றும் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.123.53 கோடி மதிப்பீட்டில் 86 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ.118.93 கோடி மதிப்பீட்டில் 44 புதிய திட்டப்பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது :- 7.5 % உள்ஒதுக்கீட்டால் அரசு பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர். அரசின் நடவடிக்கையினால் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவர்களாக உள்ளனர். நான் முதலமைச்சரான பிறகு தமிழகத்தில் கூடுதலாக 1,900 எம்பிபிஎஸ் மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு என்னைப் பற்றி நினைக்காவிட்டால் தூக்கம் வராது. தமிழகம் முதல் இடத்தில் இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அறையில் இருந்தவாறே அறிக்கைகளை விட்டு வருகிறார்.

தினந்தோறும் அறிக்கை விடும் மு.க.ஸ்டாலின் அறிக்கை நாயகனாக வேண்டுமானால் திகழலாம். ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்ற முனைப்பில் மட்டுமே அவர் செயல்படுகிறார். மக்கள் நலனோடு மட்டுமே எதிர்கட்சிகள் செயல்பட வேண்டும். பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா குறைந்துள்ளது. தமிழகம் முழுவதும் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டதால் குடிநீர் பிரச்சனை தீர்ந்துள்ளது, எனக் கூறினார்.

Views: - 0

0

0