ஒரே அணியில் இருப்பதுதான் எங்களின் வலிமை : முதலமைச்சர் பழனிசாமி பேச்சு..!!

23 December 2020, 3:58 pm
cm eps - updatenews360
Quick Share

தென்காசி : ஒரே குடும்பம் மற்றும் ஒரே அணியாக இருப்பதால்தான் அதிமுக வலிமையடைந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமியின் இல்ல நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவருடன் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சராக திறம்பட செயல்பட்டுக் கொண்டிருப்பதாக ராஜலெட்சுமிக்கு புகழாரம் சூட்டினார். இதைத் தொடர்ந்து, அவர் பேசியதாவது :- ஒரே குடும்பமாக ஒரே அணியில் இருப்பதால்தான் அதிமுக வலிமை பெற்றுள்ளது. 7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டால், ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேறி உள்ளது, எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றிபெறும்,” எனக் கூறினார்.

Views: - 4

0

0