நான் என்ன நடிகனா..? விளம்பரம் செய்றதுக்கு.. திடீரென வைரலாகும் முதலமைச்சர் பழனிசாமியின் வீடியோ..!

8 September 2020, 5:41 pm
Cm eps farm land - updatenews360
Quick Share

திருவள்ளூர் மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கு கோரிக்கை வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சுக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் முடிவடைந்த திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகாவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு சென்றிருந்தார். அப்போது, ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 12 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 7,520 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பயனாளிகளிடம் மேடையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அவர் கூறியிருப்பதாவது :- அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது. எப்படி நீங்க எங்களிடம் உரிமையா கேள்வி கேட்கிறீங்க..? ஆனால், நான் உரிமையாக கேட்கல, அன்பா கேட்கிறேன்.

அரசுக்கும் – மக்களுக்கும் பாலமா இருந்து அரசின் திட்டங்களை நீங்கள்தான் எடுத்து சொல்ல வேண்டும். ஏன் இதை சொல்றேன்னா, கஷ்டப்பட்டு நிதி ஒதுக்கி, நிதி ஆதாரத்தை பெருக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்திட்டு வர்ரோம். இது எல்லாம் மக்களுக்கு போய் சேரணும்.

என்னைய பார்க்கறவங்கல பல பேரு சொல்ராங்க, சார் நீங்க நிறைய பண்றீங்க, ஆனால் எந்த விளம்பரமே இல்லைனு… நான் என்ன நடிகனாவா இருக்கேன், விளம்பரம் பண்றதுக்கு..? பெரிய பெரிய நடிகரா இருந்திருந்தா, எனக்கு விளம்பரம் கிடச்சிருக்கும். நானோ ஒரு சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். நீங்கதான் அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு போனால்தான், அரசுக்கும், எங்களுக்கும் நற்பெயர் கிடைக்கும், எனக் கூறியுள்ளார்.

பிக்பாஸ் 4-க்காக “தப்புன்னா தட்டி கேட்பேன்” என கமல்ஹாசன் கூறும் டிரெய்லர் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், முதலமைச்சரின் இந்தப் பேச்சு டிரெண்டாகி வருகிறது.

Views: - 0

0

0