கட்சியினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எடப்பாடியார்.. சேலம் அதிமுக அலுவலகத்தில் நடந்த சுவாரசியம்…!!

17 April 2021, 7:49 pm
Cm edappadi palanisamy - updatenews360
Quick Share

சேலம் : சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் ஓமலூர் அதிமுக அலுவலகத்திற்கு திடீர் விசிட் செய்தது கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சிப் பணிகளை வீட்டில் இருந்தவாறே கவனித்து வந்தார். தேர்தல் தொடர்பான விவகாரங்கள் அனைத்தையும் தொலைபேசியின் வாயிலாகவே கேட்டறிந்து வந்தார்.

இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென சென்றார். அங்கு வழக்கம் போல அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கட்சி நிர்வாகிகள், இவரை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் போது, வாக்கு எண்ணிக்கை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென வந்தது, கட்சி நிர்வாகிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Views: - 82

0

2