ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!!

23 November 2020, 2:11 pm
CM meet governor - updatenews360
Quick Share

சென்னை : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சந்தித்து பேசுகிறார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கைகளினால், தமிழக கொரோனா பாதிப்பு நாளொன்று 1,500 வரை குறைந்துள்ளது. நேற்று 1,655 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,69,995 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 36 நாட்களாக சென்னையில் ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்புகளே பதிவாகியுள்ளன. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 11,605 ஆகவும், டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 7,45,848 ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதிப்பு நிலவரம் குறித்து ஆளநரிடம் விளக்கிக் கூற உள்ளார்.

Views: - 0

0

0