இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி : முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு..!!!

26 February 2021, 1:34 pm
CM - Updatenews360
Quick Share

சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்திக்கிறார்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து 5 மாநிலங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகிறது.

5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை 4.30 மணியளவில் அறிவிக்கிறது.

இந்த நிலையில், சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சந்திக்கிறார். தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட இருப்பதால், இந்த சந்திப்பின் போது முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 22

0

0