கொரோனா ஆய்வுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வேலூர் பயணம்..!

19 August 2020, 10:12 am
EPS_UpdateNews360
Quick Share

சென்னை : கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வேலூர் செல்கிறார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், அதிகம் பாதித்த மாநிலங்களாக மகாராஷ்டிராவைத் தொடர்ந்து தமிழகம் இருந்து வருகிறது. தமிழகத்தில் 3 லட்சத்து 49 ஆயிரத்தை மொத்த பாதிப்பு கடந்துள்ளது.

மாநிலத்தில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வரும் நிலையில், மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்து வருகிறார்.

இந்த நிலையில், நாளை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தர்மபுரி மாவட்டங்களிலும், 21-ம் தேதி கரூர், நாமக்கல் மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்கிறார்.