பேரறிஞர் அண்ணாவின் 112வது பிறந்த தினம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை..!
15 September 2020, 11:10 amQuick Share
சென்னை : பேரறிஞர் அண்ணாவின் 112வது பிறந்த தினத்தையொட்டி, அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் முன்னோடியான அறிஞர் அண்ணாவின் 112வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. திராவிட கட்சிகள் சார்பில் அண்ணாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, அரசியல் தலைவர்களும் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அண்ணாவின் 112-வது பிறந்தநாளையொட்டி, அண்ணாவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.