“என்றும் நான், என் அம்மாவின் மாணவன்” ; ஆசிரியர் தினத்தில் ஜெயலலிதாவை நினைவுகூர்ந்த எடப்பாடியார்..!

5 September 2020, 7:58 pm
eps - jaya -updatenews360
Quick Share

சென்னை : ஆசிரியர் தினத்தன்று ‘என்றும் நான், என் அம்மாவின் மாணவன்” எனக் கூறி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைவு கூர்ந்தார்.

முன்னாள் குடியரசு தலைவரும், பேராசிரியருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் 132வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்த நாள் நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தனது நினைவுகளை பகிர்ந்து கொள்வதுடன், ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஆசிரியர் தினத்தன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைவு கூர்ந்து, தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில், “எனக்கு அரசியல் ஆசானாய் இருக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்களை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Views: - 11

0

0