அனைத்து காவல் நண்பர்களின் உன்னத தியாகத்தை நினைவு கூறுகிறேன் : முதலமைச்சர் பழனிசாமி

21 October 2020, 2:02 pm
TN_CM_EPS_UpdateNews360
Quick Share

காவலர் வீரவணக்க தினத்தை முன்னிட்டு, அனைத்து காவல் நண்பர்களின் உன்னத தியாகத்தை நினைவு கூறுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் அக்.,21ம் தேதி காவலர்கள் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு இன்று மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் டிஜிபி திரிபாதியும், காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலும் காவலர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், காவலர்களின் வீர வணக்க நாளை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட் ஒன்றை போட்டுள்ளார். அதில்,”சமூகத்தின் பாதுகாவலனாய், பொதுமக்களின் உற்ற தோழனாய், அர்ப்பணிப்பின் இலக்கணமாய், தங்களின் அயராத உழைப்பால் அல்லும் பகலும் மக்கள் பணியாற்றிடும் அனைத்து காவல் நண்பர்களின் உன்னத தியாகத்தை தேசிய காவல்துறை தின நாளில் நினைவு கூர்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 19

0

0