மீண்டும் மாவட்ட வாரியான ஆய்வை தொடங்கும் முதலமைச்சர் பழனிசாமி : 29ம் தேதி தூத்துக்குடி செல்கிறார்..!!

19 October 2020, 8:26 pm
CM Speech- Updatenews360
Quick Share

சென்னை : கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29ம் தேதி தூத்துக்குடி செல்கிறார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், தொற்று தடுப்பு பணிகளை மாவட்ட வாரியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு வந்தார். கடந்த 12ம் தேதி முதலமைச்சரின் தாயார் காலமானார். இதனால், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த தூத்துக்குடி, நாகர்கோவில், விருதுநகர் ஆகிய ஊர்களுக்கான அரசுமுறை பயணம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்காக வரும் 29-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்கிறார். வரும் 30-ம் தேதி பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில் பங்கேற்க இருக்கிறார்.

Views: - 17

0

0