28ம் தேதி ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் சந்திப்பு : டிசம்பர் மாத தளர்வுகள் பற்றி முக்கிய ஆலோசனை

26 November 2020, 5:40 pm
EPS discuss - updatenews360
Quick Share

சென்னை : 10வது கட்ட ஊரடங்கு 30ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 28ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் 1,500 என்ற சராசரியில் நாளொன்றுக்கான பாதிப்பு இருந்து வருகிறது.

இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 10வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்புகளை பொறுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 10வது கட்ட ஊரடங்கு 30ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் வரும் 28ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த ஆலோசனையின் போது, மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றியும், நோய் தொற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிய உள்ளார்.

Views: - 0

0

0