தாய்த்தமிழின் அருமையை உலகிற்கு உணர்த்திய ஒப்பற்ற புலவர் : முதலமைச்சர் பழனிசாமி திருவள்ளுவர் தின வாழ்த்து

15 January 2021, 11:15 am
Edappadi_Palaniswami_UpdateNews360
Quick Share

சென்னை : திருவள்ளுவர் தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் ஒரு நிகழ்வாக தை மாதத்தின் இரண்டாவது நாளான மாட்டுப் பொங்கல் திருநாளன்று, தமிழ் கவிஞர் திருவள்ளுவரின் நாளாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இன்று திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது இதையொட்டி, பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் அவரது பெருமைகளையும், சிறப்புகளையும் எடுத்துரைத்து வருகின்றனர்.

அந்த வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருவள்ளுவர் நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தமிழில் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில்,
“முப்பாலில் முக்காலமும் உணர்த்திய தெய்வப்புலவர். உலகிற்கான பொதுமறையை தந்து தாய்த்தமிழின் அருமையை உலகிற்கு உணர்த்திய ஒப்பற்ற முதற்பாவலரான திருவள்ளுவர் பெருந்தகையின் தினத்தில் அவரை வணங்கி மகிழ்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 5

0

0