சர்வதேச செஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய தமிழக சிறுவனுக்கு முதலமைச்சர் வாழ்த்து!!

24 August 2020, 3:57 pm
Cm- edappadi chess- udpatenews360
Quick Share

சென்னை : சர்வதேச ஆன்லைன் செஸ் போட்டியில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய தமிழகத்தைச் சேர்ந்த சிறுவனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் சார்பில் ஜுலை 22ம் தேதி முதல் ஆக.,30ம் தேதி வரையில்ர ஆன்லைன் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த சிறுவன் பிரக்னா நந்தா, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இது இந்தியாவிற்கும், தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

இந்த நிலையில், ஆன்லைன் செஸ் போட்டியில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய தமிழகத்தைச் சேர்ந்த சிறுவனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் வாழ்த்து செய்தியில், “சர்வதேச செஸ் கூட்டமைப்பின் ஆன்லைன் செஸ் போட்டியில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்னாநந்தா அவர்கள் இறுதி சுற்றிலும் வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை தேடித்தர எனது அன்பார்ந்த நல்வாழ்த்துகள்!,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 42

0

0