சிங்கப்பூர், மலேசியாவுடன் கொரோனா கால விமானப் போக்குவரத்து ஒப்பந்தம் போடுங்க : முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
25 November 2021, 12:14 pm
CM Stalin -Updatenews360
Quick Share

சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கு இடையில், தற்காலிக கோவிட் கால ” விமான போக்குவரத்து ஏற்பாடுகள் உடன்படிக்கையை செய்து கொள்ள வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மத்திய அரசின்‌ சிவில்‌ விமானப்‌ போக்குவரத்து அமைச்சகம்‌ சிங்கப்பூர்‌, மலேசியா போன்ற நாடுகளுடன்‌ கோவிட்‌ கால விமானப்‌ போக்குவரத்திற்கான ஒப்பந்தம்‌ செய்து கொள்ளாத நிலையைக்‌ குறிப்பிட்டு, அந்நாடுகளில்‌ வாழும்‌ புலம்‌ பெயர்ந்த தமிழர்கள்‌ தமிழ்நாட்டிற்கு வர விரும்பும்‌ நேர்வுகளில்‌, நேரடி விமான சேவையில்லாத காரணத்தால்‌, துபாய்‌, தோகா மற்றும்‌ கொழும்பு மார்க்கமாக மாற்றுப்‌ பாதையில்‌ பயணம்‌ மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அதன்‌ காரணமாக பல்வேறு இன்னல்களுடன்‌ அதிக விமானக்‌ கட்டணங்களைச்‌ செலுத்த வேண்டியுள்ளதாகவும்‌ சுட்டிக்காட்டி, அவர்கள்‌ எதிர்கொள்ளும்‌ இத்தகைய இடர்ப்பாடுகளைத்‌ தீர்ப்பதற்கு தற்காலிக விமான சேவைகளை வழங்கிட ஏதுவாக, சிங்கப்பூர்‌ மற்றும்‌ மலேசியா நாடுகளுக்கு இடையில்‌ தற்காலிக கோவிட்‌ கால “விமானப்‌ போக்குவரத்து ஏற்பாடுகள்‌” உடன்படிக்கையை செய்து கொள்ளுமாறு கோரி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்‌ மத்திய விமானப்‌ போக்குவரத்துத்‌ துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 135

0

0

Leave a Reply