முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் : தமிழக அரசு தகவல்

7 May 2021, 2:48 pm
cm stalin - updatenews360
Quick Share

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலினின் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 34 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, கொரோனா நிவாரண நிதியாக 2.76 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும் உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினின் செயலர்களாக உதயச் சந்திரன், உமாநாத், அனு ஜார்ஜ், எம்.எஸ் சண்முகம் ஆகிய 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதன்மைச் செயலாளராக ஈரோடு, மதுரை மாவட்டங்களில் ஆட்சியராக பணிபுரிந்த உதயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். 2வது செயலாளராக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த உமாநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்துள்ளார். 3வது செயலாளராக எம்எஸ் சண்முகமும், 4வது செயலாளராக அனு ஜார்ஜ் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Views: - 191

0

0