வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
Author: Babu Lakshmanan28 August 2021, 12:07 pm
சென்னை : மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக ஆட்சியமைந்த பிறகு முதல்முறையாக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டத்திருத்தங்களுக்கு எதிராக தமிழக
சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையிலிருந்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இருப்பினும், முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்த இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது :- மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திருத்த மசோதா மற்றும் சட்டத்திருத்த சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள், விவசாய அமைப்புகள் மீது
போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுகிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த 7வது மாநிலமாக தமிழகம் உள்ளது, என தெரிவித்தார்.
0
0