படுகொலை செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

Author: Babu Lakshmanan
14 October 2021, 6:53 pm
stalin cm - updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே படுகொலை செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 4ம் தேதி ஒரகடம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை வழக்கம் போல மூடிவிட்டு இரு ஊழியர்கள் தங்களின் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை வழிமறித்த மர்ம கும்பல், இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில், பலத்த காயமடைந்த டாஸ்மாக் விற்பனையாளர் துளசிதாஸ் என்பவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

படுகொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் கடந்த 5ந்தேதி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் கொலை செய்யப்பட்ட டாஸ்மாக் பணியாளர் துளசிதாஸ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Views: - 95

0

0

Leave a Reply