அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள்… முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

Author: Babu Lakshmanan
30 June 2021, 2:05 pm
stalin hyundai - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஹுண்டாய் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு கோடியாவது காரை விற்பனைக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். ஹூண்டாயில் உற்பத்தியான ஒருகோடியாவது காரில் வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டு கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டு வரும் பேட்டரி கார்களை அவர் பார்வையிட்டார்.

பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரையில், “ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலைகளிலேயே அதிக உற்பத்தியை செய்யும் நிறுவனமாக ஹுண்டாய் இருந்து வருகிறது. அதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தெற்காசியாவிலேயே தொழில் தொடங்க சிறந்த இடம் தமிழகம் என்னும் நிலையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு அந்தப் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என்று கூறினார்.

Views: - 236

0

0