தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை

Author: Babu Lakshmanan
24 June 2021, 2:51 pm
stalin cm - updatenews360
Quick Share

சென்னை : கொரோனா ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளைஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளொன்று சுமார் 7 ஆயிரத்திற்கும் கீழான பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இதனிடையே, கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மாவட்டங்களை 3 பிரிவுகளாக பிரித்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. தொற்று குறைந்த மாவட்டங்களாக கருதப்படும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொது போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகமுள்ளதாக கருதப்படும் கோவை, திருப்பூர் உள்பட 11 மாவட்டங்களில் முன்பு அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடனும், எஞ்சிய 23 மாவட்டங்களில் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். காணொளி காட்சி மூலம் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டம் காலை 10 மணிக்கு நடக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகளை அறிவிப்பது குறித்து முடிவு செய்யப்பட இருக்கிறது.

Views: - 242

0

0