கல்வி தொலைக்காட்சியில் புதிய பாடங்கள் : முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

19 June 2021, 1:04 pm
cm stalin - updatenews360
Quick Share

சென்னை : கல்வி தொலைக்காட்சியில் புதிய பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்ததால், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

1ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய பாடங்களுக்கான வகுப்புகள் கல்வி தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டுக்கான பாடநூல்கள் வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்

இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 202

0

0