தமிழகத்திற்கு தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்துங்க : மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..!!

Author: Babu Lakshmanan
28 June 2021, 3:33 pm
CM Stalin Order - Updatenews360
Quick Share

தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டு அளவை உயர்த்தி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனைத்து மக்களும் தயாராகியுள்ள நிலையில், தடுப்பூசி பற்றாக்குறைதான் நிலவுவதாக தமிழக மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் ஒன்றைய எழுதியுள்ளார். அதில், மாநிலங்களில் உள்ள மக்கள் தொகையின் எண்ணிக்கையின் அடிப்படையில் தடுப்பூசி ஒதுக்கீட்டை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். எனவே, மக்கள் தொகை அதிகமுள்ள தமிழகத்திற்கு வழங்கப்படும் தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும்.

மாநிலங்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு 75%, தனியார் மருத்துவமனைகளுக்கு 25% என்ற விகிதத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் ஒருநாள் தேவையைவிட குறைவான தடுப்பூசிகளே இருக்கின்றன, எனவே, அரசு மருத்துவமனைகளுக்கான உள்ஒதுக்கீட்டை 90 விழுக்காடாக உயர்த்த வேண்டும், என வலியுறுததியுள்ளார்.

Views: - 183

0

0