பிரதமர் மோடியை சந்தித்தார் முதலமைச்சர் ஸ்டாலின் : நதிநீர் இணைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு..!!

17 June 2021, 6:01 pm
stalin - pm modi meet - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தின் முதலமைச்சர் பொறுப்பேற்ற ஸ்டாலின், முதல்முறையாக பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக முக ஸ்டாலின் முதல்முறையாக பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றது முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே, தமிழகத்தில் முதலமைச்சராக முதல்முறையாக பொறுப்பேற்றதை தொடர்ந்து, பிரதமர் மோடியை இன்று ஸ்டாலின் சந்தித்து பேச திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக அவர் டெல்லி சென்றுள்ளார். அவரை திமுக எம்பிக்கள் வரவேற்றனர்.

பின்னர், தமிழ்நாடு இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். சுமார் 25 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் நதிநீர் இணைப்பு, செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது மற்றும 7 பேர் விடுதலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்த கோரிக்கைகளை பிரதமரிடம் அவர் முன் வைத்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், எம்பி டிஆர் பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Views: - 179

1

0