தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து பின்வாங்க மாட்டோம் : முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி
Author: Babu Lakshmanan16 August 2021, 12:38 pm
சென்னை : தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது, தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்குவதற்காகத்தான் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதா..? என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்எல்ஏவுமான ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது :- கடந்த ஆட்சியில் அவசர அவசரமாக தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன்களில் முறைகேடுகள் ஏற்பட்டுள்ளது. அவை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது ஆதாரத்துடன் எடுத்துரைக்கப்படும். முறைகேடுகள் சரிசெய்யப்பட்டு, பின்னர் கடன் தள்ளுபடி செய்யப்படும், எனக் கூறினார்.
அப்போது, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நிலமில்லாத எத்தனை பேருக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது, எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, 2.5 லட்சம் நிலங்களை ஏழை, எளிய மக்களுக்கு திமுக அரசுதான் பிரித்துக் கொடுத்தது எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், “திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து திட்டங்களும் உறுதியாக நிறைவேற்றப்படும். தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்,” எனக் கூறினார்.
0
0