உலகம் முழுவதும் Made in Tamilnadu ஒலிக்க வேண்டும்… இதுவே லட்சியம் : முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!!

Author: Babu Lakshmanan
22 September 2021, 1:05 pm
stalin - - updatenews360
Quick Share

சென்னை : உலகம் முழுவதும் தமிழகத்தின் தயாரிப்பு என்று ஒலிக்க வேண்டும் என்பதே அரசின் இலட்சியம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு என்னும் மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.2,120 கோடி மதிப்பிலான 24 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இன்று மட்டும் 10 ஏற்றுமதி நிறுவனங்களுடன் ரூ.240 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது :- தேசிய அளவில் ஏற்றுமதியில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப்படும். ஏற்றுமதியில் ஏற்றம் பெற்று இந்திய அளவில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் அடையாளமாக உள்ள பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் அமையவிருக்கும் கார் உதிரி பாகத் தயாரிப்பு தொழிற்சாலையின் மூலம் சுமார் 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதுபோன்ற தொழில் சம்பந்தமான மாநாடுகளும், கண்காட்சிகளும் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற வேண்டும். உலகம் முழுவதும் Made in tamilnadu என்ற குரல் ஒலிக்க வேண்டும். இதுவே தமிழக அரசின் லட்சியம், என தெரிவித்துள்ளார்.

Views: - 164

0

0