பலனை எதிர்பார்க்காமல் உழைத்த தொண்டர்களால் விளைந்தது திமுக ஆட்சி : முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

Author: Babu
15 September 2021, 8:09 pm
Dmk function -updatenews360
Quick Share

சென்னை : எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் உழைத்த தொண்டர்களினால் விளைந்தது திமுக ஆட்சி என்று முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

செப்.,17ம் தேதி தந்தை பெரியாரின் பிறந்த நாள், செப்.,15ம் தேதி திமுகவின் நிறுவனர் அண்ணாவின் பிறந்த நாள், செப்.,17 திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் என 3 முக்கிய தினங்களையும் ஒன்றிணைத்து முப்பெரும் விழாவாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டாடினார். அவர் மறைந்த பிறகும் இந்த விழாகொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடந்த முப்பெரும் விழாவில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். இதில் பெரியார் விருது – மிசா பி.மதிவாணனுக்கும், அண்ணா விருது – தேனி எல்.மூக்கையாவுக்கும், கலைஞர் விருது- கும்மிடிப்பூண்டி கி.வேணுவுக்கும், பாவேந்தர் விருது- வாசுகி ரமணனுக்கும், பேராசிரியர் விருது – பா.மு.முபாரக்குக்கும் வழங்கப்பட்டது.

பின்னர், நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :- தமிழகத்தில் திமுக ஆட்சி என்பது எந்த பலனையும் எதிர்ப்பார்க்காமல் உழைத்த தொண்டர்களால் விளைந்தது. திமுக ஆட்சி தொடர்வதற்கான அடித்தளத்தை தொண்டர்கள்தான் அமைத்திட வேண்டும். திமுக ஆட்சி சொன்னதை செய்யும் என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தி இருக்கிறோம்.

தமிழ்நாட்டிலே 6வது முறையாக திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின் நடைபெறும் முதல் முப்பெரும் விழா, விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். திமுகவுக்காக உழைத்தவர்கள் வாழக்கூடிய காலத்திலேயே பாராட்டும் வகையில் விருது வழங்கப்படுகிறது.தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை எல்லாம் படிப்படியாக நிறைவேற்றி வருகிறேன், என தெரிவித்துள்ளார்.

Views: - 144

0

0

Leave a Reply