‘நைட்டுக்கு நான் வரவா’ கல்லூரி மாணவிக்கு ஆபாச Chat : கல்லூரி பேராசிரியரின் லீலை அம்பலம் : பணியிடை நீக்கம் செய்து அதிரடி..!!

Author: Babu Lakshmanan
29 September 2021, 11:49 am
cbe teacher -updatenews360
Quick Share

கோவை : கோவையில் பேரூர் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரியில் மாணவியிடம் ஆபாசமாக பேசிய தொல்லை கொடுத்த பேராசிரியர் திருநாவுக்கரசு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பேரூர் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரியில் பி.லிட். படித்து வரும் மாணவிக்கு பாலியல் ரீதியில் திருநாவுக்கரசு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அந்த பதிவுகளின் screen shot தற்போது வெளியாகி உள்ளது. அதில் இரவு 9.30 மணிக்கு மேல் அந்த மாணவிக்கு டெலிகிராம் இல் மெசேஜ் செய்துள்ள பேராசிரியர் திருநாவுக்கரசு, “வீட்ல எல்லாரும் வந்துட்டாங்களா? உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்! பக்கத்துல யாராச்சும் இருக்காங்களா? உன் கண்ணு ரொம்ப அழகா இருக்கு, உன் முகம் ரொம்ப அழகா இருக்கு, நீயும் நானும் இனி ரொம்ப கிளோஸ், நீ என் கூட இருந்தா நல்லா இருக்கும், சமைக்க பழகிக்கோ, தனியா இருக்க போர் அடிக்கலயா, நைட்டுக்கு நான் வரவா, வீட்ல அம்மா இருக்காங்க இல்லாதப்போ சொல்றன் நீ வா, நம்ம ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது நெறயா பண்ணலாம், என்றெல்லாம் மிகவும் கேவலமாக பேசியிருக்கிறார்.

அந்த மாணவி தன் அருகில் யாரும் இல்லை என்று கூறியவுடன், திருநாவுக்கரசு சட்டையைக் கழற்றி விட்டு உள்பனியனுடன் கட்டிலில் சாய்ந்த படி செல்ஃபி எடுத்து அந்த மாணவிக்கு அனுப்பியுள்ளார். பின்பு இதேபோல நீயும் போட்டோ எடுத்து அனுப்பு என்று கூறுகிறார். (அப்போது மணி இரவு 10.45) இந்த ஆபாச chat இன் screen shot முழுவதும் தற்போது வெளியாகி உள்ளது.

Screenshot முதலிய தக்க ஆதாரங்களை காண்பித்து மாணவர்கள் கேள்வி கேட்டபோது, முதலில் குழப்ப முயற்சி செய்து பின்பு தான் கையும் களவுமாக பிடிப்பட்டுள்ளதை உணர்ந்து ஒப்புக்கொள்கிறார். மேலும் இந்த ஆதாரத்தை மாணவர்கள் வெளியிடும் பட்சத்தில் தான் தற்கொலை செய்துகொள்வதாக உணர்வு ரீதியில் மிரட்டுகிறார்.

ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்வந்த பாலியல் புகாரினால் தான் திருநாவுக்கரசு அவர்களின் மனைவி அவரைப் பிரிந்து சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திருநாவுக்கரசு பி.லிட் மாணவிக்கு அனுப்பிய ஆபாச chat குறித்து மாணவர்கள் தக்க ஆதாரங்களுடன் புகார் அளித்து 10 நாட்களுக்கு மேலாகியும் கல்லூரி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது :- தமிழ்த்துறை இணைப்பேராசிரியராகப்‌ பணியாற்றி வரும்‌ முனைவர்‌ கா.திருதாவுக்கரசு மீது முன்னாள்‌ மாணவர்‌ செ.சதீஸ்குமார்‌ என்பவர்‌, தற்போது மூன்றாம்‌ ஆண்டில்‌ கல்வி பயின்று வரும்‌ மாணவி ஒருவரிடம்‌ பாலியல்‌ ரீதியாக இரவு நேரத்தில்‌ கைபேசியில்‌ பேசித்‌ தொல்லை
கொடுத்ததாகக்‌ குற்றம்‌ சுமத்தியுள்ளார்‌.

அவர்‌ அளித்த ஆவனங்களின்‌ அடிப்படையில்‌ குற்றம்‌ நடந்ததற்கான முகாந்தரம்‌ இருப்பதாகத்‌ தெரிய வந்தது. அதனைத்‌ தொடர்ந்து 25.09.2021 நாளிட்ட செயலாளரின்‌ விளக்கம்‌ கோரும்‌ கடிதம்‌ அளிக்கப்பட்டது. அதன்‌ அடிப்படையில்‌ தாங்கள்‌ தன்னிலை விளக்கத்தை வழங்கினீர்கள்‌. அது நிறைவுடையதாக (திருப்திகரமாக) இருக்கவில்லை. எனவே இது குறித்து விசாரிக்க உள்‌ விசாரணைக்குழு அமைக்க செயலர்‌ கல்லூரிக்‌ குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளார்‌. அதுகாறும்‌ தாங்கள்‌ இன்று (27.09.2021) பிற்பகல்‌ 3.00 மணி முதல்‌ பணி இடை நீக்கம்‌ செய்யப்படுகிறீர்கள்‌ என்று அறிவிக்கலாகிறது.

பணி இடை நீக்கக்‌ காலத்தில்‌
1) செயலாளரின்‌ அனுமதியின்றி கல்லூரிக்கு வரக்கூடாது
2) கோவையை விட்டு வெளியே செல்லக்‌கூடாது. எனத்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவிகளின் அறியாமையையும், ஏழ்மையையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன் காமப் பசியை தீர்த்துக் கொள்ளும் இது போன்ற குற்றவாளிகளுக்கு அரசு தக்க தண்டனை வழங்கினால் தான், இதுபோன்ற அப்பாவி மாணவிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியும்.

Views: - 676

1

0