‘லீவு முடுஞ்சுது இனி எல்லாம் காலேஜுக்கு போ..போ’ : நவம்பரில் இருந்து மாணவர்களுக்கு வகுப்புகள் ஸ்டார்ட்..!

22 September 2020, 1:26 pm
students - updatenews360
Quick Share

டெல்லி : கல்லூரி, பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் நவ.,1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவிக் கொண்டு இருக்கிறது. ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. பொதுமக்கள், மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என அனைத்து தரப்பினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் கல்வி நிலையங்கள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் வழியில் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

தொடரும் கொரோனா பாதிப்பால் எப்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்பது தெரியவில்லை. மேலும், டிசம்பர் இறுதி வரை கல்வி நிறுவனங்கள் திறக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் திறப்பது குறித்த அறிவிப்பை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நவ.,1 முதல் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும். அக்.,31ம் தேதிக்குள் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை நிறைவு செய்து வகுப்புகள் தொடங்கலாம். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச்சில் முதல் செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 8

0

0