வரும் 26ம் தேதி வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு : நீதிமன்றங்களை முழுமையாக திறக்க வலியுறுத்தல்..!

Author: Babu
12 October 2020, 1:56 pm
Chennai HC- updatenews360
Quick Share

சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள நீதிமன்றங்களை முழுமையாக திறக்காவிடில் வருகிற 26ம் தேதி மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளதாக அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களை உடனடியாக திறக்க வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆவின் வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் வழக்கறிஞர் சத்தியசீலன் பேசியதாவது :- தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள பார் அசோசியேசன்களை உடனே திறக்க வேண்டும். இந்த நிலை நீடித்தால் வருகிற 26ம் தேதி மாபெரும் உண்ணாவிரத போரட்டம் நடைபெறும்.

மீண்டும் திறக்காவிடில் நவம்பர் 9ம் தேதி மாபெரும் முற்றுகை போராட்டமும், மனித சங்கிலி போராட்டமும் நடைபெறும். நீதிமன்றத்திற்கு காவல்துறையினர், ஊழியர்கள் மற்றும் குற்றவாளிகள் என அனைவரும் வரும் நிலையில், வழக்கறிஞர்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதி மறுக்கபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

வழக்கறிஞர்கள் கழிவறை செல்லவதற்கும், வாகனங்களை நிறுத்துவதற்கும் வசதி இல்லாத நிலை உள்ளது. இதனை நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் வழக்கறிஞர்களை பலி வாங்கும் நோக்கில் செயல்படுகிறது. எனவே தலைமை நீதிபதி இந்த பிரச்சனையில் தலையிட்டு இதற்கு தீர்வு காணவேண்டும்.

நீதிமன்றம் முழுமையாக திறக்கபட வேண்டும். வீடியோ கான்பிரன்ஸ் முறை ஒழிக்கபட வேண்டும். இதனை உடனே பரீசீலிக்காவிடில் வருகிற 26ம் தேதி உண்ணாவிரத போராட்டமும், அதனை தொடர்ந்து நவம்பர் 9 தேதி அகில இந்திய கூட்டமைப்பு வழக்கறிஞர்கள் ஒன்று திரண்டு உயர்நீதிமன்ற முற்றுகை போராட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம், என தெரிவித்தார்.

Views: - 43

0

0