குடிசை மாற்று வாரிய வீடு ஒதுக்குவதில் தகராறு: வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் மல்லுக்கட்டிய திமுக நிர்வாகிகள்..!!

Author: Aarthi Sivakumar
19 September 2021, 11:17 am
Quick Share

பொள்ளாச்சி: குடிசை மாற்று வாரிய வீடு ஒதுக்கீடு செய்வதில் திமுகவினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கிட்டசூராம்பாளையத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில், 35 கோடி ரூபாய் மதிப்பில், 4 ஏக்கர் பரப்பளவில், 512 குடியிருப்புகளுடன் அடுக்குமாடி கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் மாணிக்கராஜ், திமுக நகர தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் விவேக் ஆகியோர் விண்ணப்பங்களுடன் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்தனர். நந்தனார் காலனியில் வீடு ஒதுக்குவது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இந்த மோதலையடுத்து, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் திமுக நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் அறிந்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை மோதலில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் தகாத வார்த்தைகளில் திட்டி மிரட்டல் விடுத்துள்ளனர்.

திமுகவினர் மோதலை தொடர்ந்து பொள்ளாச்சி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 241

0

0